அடுத்தகட்ட நகர்வு என்ன? - மைத்திரி - சஜித் நேரடிப் பேச்சு
#SriLanka
#Maithripala Sirisena
#Sajith Premadasa
Prasu
3 years ago

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள மைத்திரிபால சிறிசேனவின் வதிவிடத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் 11 கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.



