யாரையும் பழிவாங்க மாட்டோம்- புதிய பிரதமராக பொறுப்பேற்கும் ‌ஷபீஸ் ஷெரீப்

#Pakistan #PrimeMinister
Prasu
3 years ago
யாரையும் பழிவாங்க மாட்டோம்- புதிய பிரதமராக பொறுப்பேற்கும் ‌ஷபீஸ் ஷெரீப்

இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ‌ஷபீஸ் ஷெரீப் நாளை பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில் யாரையும் பழிவாங்க மாட்டோம் என்று ‌ஷபீஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- (நவாஸ்)தலைவருமான அவர் இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

நாடு மற்றும் பாராளுமன்றம் இறுதியாக நேற்று இரவு கடுமையான நெருக்கடியில் இருந்து விடுவிக்கப்பட்டது. புதிய விடியலுக்கு பாகிஸ்தான் தேசத்துக்கு வாழத்துக்கள்.

புதிய அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் இருக்காது. அதே நேரத்தில் சட்டம் அதன் கடமையை செய்யும்.

நாங்கள் யாரையும் பழிவாங்க மாட்டோம். யாருக்கும் அநீதி இழைக்க மாட்டோம். சட்டம் அதன் பாதையில் செல்லும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!