பசியை போக்க 16 நாள் டேட்டிங் சென்ற கல்லூரி மாணவி

வெளிநாட்டில் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவி மெக்கால் பிராக். படிக்கும்போது, உணவுக்கு பணம் இன்றி தவித்த காலத்தில் தனக்கு கிடைத்த புது அனுபவம் பற்றி டிக்-டாக்கில் இவர் வெளியிட்ட வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி பலரது விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
அவர் வெளியிட்ட பதிவில், கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போது, பணம் தீர்ந்து விட்டது. உணவுக்கு என்ன செய்ய என்று யோசித்தபோது, டேட்டிங் செயலியில் சென்று தீர்வு தேடினேன். அதன்பின்னர் 16 நாட்களுக்கு தொடர்ச்சியாக டேட்டிங் சென்றேன். 16 நாளும் எனது உணவு தேவையை பூர்த்தி செய்து கொண்டேன் என தெரிவித்து உள்ளார்.
டேட்டிங் என்பது வெளிநாடுகளில் காணப்படும் கலாசாரம். திருமணம் ஆகாத, முன்பின் தெரியாத ஆண் மற்றும் பெண் இருவரும் ஒன்றாக சந்தித்து, பேசி கொள்வதுடன், தங்களுக்கு இடையேயான வருங்கால உறவை வளர்த்து கொள்வது ஆகும். இந்த சந்திப்பில் திருமணத்திற்கு பின்னான தாம்பத்ய உறவும் கூட இருவருக்கு இடையே ஏற்பட கூடும்.
இந்த பதிவில் பிராக், டேட்டிங்கிற்கு வெளியே செல்ல விரும்பி அனைத்து ஆடவர்களும் என்னிடம் கேட்டு கொண்டார்கள் என்று விளக்கமும் அளித்துள்ளார்.
இந்த வீடியோவை, 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் விமர்சனங்களையும் பதிவிட்டு உள்ளனர்.
அதில் ஒருவர், இதற்கு பெயர்தான் அறிவுஜீவி என கூறுவது என்று பிராக்கை புகழ்ந்துள்ளார். வேறொருவர், சாப்பிட பணம் இருந்தும் கூட மக்களில் சிலர் இதனை செய்கிறார்கள் என தெரிவித்து உள்ளார்.
மற்றொரு நபர், அவர் ஒரு பெண் தொழிலதிபர். தொழிலை செய்கிறார் என தெரிவித்து உள்ளார். வேறொருவரோ, பர்சில் பணம் நிரம்ப வேண்டும் என்பதற்காக எனது 20 வயதில் 6 மாதங்களாக இதனையே செய்து வந்தேன் என பதிவிட்டு உள்ளார்.
இலவச இரவு விருந்துக்காக டேட்டிங் சென்றோம் என சில இளம்பெண்கள் கூற கேட்டிருக்கிறேன் என்று ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
எனினும் ஒரு சிலர் அறிவுரையும் கூறி உள்ளனர். அதில் ஒருவர், படிக்கும்போது உணவுக்கான பணம் தீர்ந்து விட்டால், உணவு விடுதியில் வேலைக்கு சேருங்கள். உங்களுக்கு பணமும் கிடைக்கும். இலவச உணவும் கிடைக்கும் என்று தெரிவித்து உள்ளார்.



