இன்று கவனமாக பயணம் செய்யுங்கள், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
#SriLanka
#Rain
#today
Mugunthan Mugunthan
3 years ago

நாட்டின் பல பகுதிகளில் இன்று (08) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
பகலில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.



