டொலர் பிரச்சினைக்கு எம்மிடம் தீர்வுள்ளது! சபையில் சஜித் பிரேமதாச தெரிவிப்பு
#SriLanka
#Sajith Premadasa
#Dollar
Mugunthan Mugunthan
3 years ago

நாட்டின் டொலர் பிரச்சினையை தீர்ப்பதற்காக தம்மிடம் தீர்வுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பென்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்நாட்டு டொலர் கொள்ளையை அந்தந்த நாடுகளில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் டொலர் பிரச்சினைக்கு உடனடி தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றை இந்நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தால் நாட்டில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டார்.



