பணத்தை சரியான வழியில் அனுப்புங்கள் - வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு பொருளாதார நிபுணர் ஒருவரின் வேண்டுகோள்
#SriLanka
#International
#Dollar
Mugunthan Mugunthan
3 years ago

இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்புவது, தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
சட்ட வழிகளில் மாத்திரம் தமது பணத்தை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது இலங்கை சார்பானவர்களின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



