ஜனாதிபதி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்-அனுரகுமார திசாநாயக்க
Prabha Praneetha
3 years ago

ஜனாதிபதி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றே இந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆசனத்தில் இருந்துகொண்டு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கும் எந்தவொரு தீர்வையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தமது கட்சி ஆதரவளிக்கும் என்றும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த இன்றும் இடம்பெறும் விவாதத்தின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.



