உலகின் மிகவும் பலவீனமான நாணயமாக பதிவாகிய இலங்கை ரூபாய்

#SriLanka
Nila
3 years ago
உலகின் மிகவும் பலவீனமான நாணயமாக பதிவாகிய இலங்கை ரூபாய்

உலகின் மிகவும் பலவீனமான நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளதாக Financial Times of India செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மைக்கால நெருக்கடி காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதியானது உலகிலேயே வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அரசாங்கம் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்க டொலரொன்றின் விற்பனைப் பெறுமதி 308 ரூபா 49 சதமாக அதிகரித்துள்ளது. அத்துடன் டொலரின் கொள்முதல் பெறுமதியானது 298 ரூபா 10 சதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 70 சதமாகவும், விற்பனை பெறுமதி 339 ரூபா 07 சதமாகவும் காணப்படுகிறது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபா 15 சதம், விற்பனை பெறுமதி 404 ரூபா 71 சதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!