பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைத்தன்மை குறித்து ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்
#SriLanka
#Gotabaya Rajapaksa
Prasu
3 years ago

பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைத்தன்மை குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, உலக வங்கியின் முன்னாள் பதில் தலைமை பொருளியலாளர் பேராசிரியர் சாந்த தேவராஜன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆபிரிக்க திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஷர்மினி குரே ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.



