சூடான் ஆயுதக் குழு தலைவருக்கு எதிராக சா்வதேச நீதிமன்றில் போர்க்குற்ற விசாரணை!

Mayoorikka
3 years ago
சூடான் ஆயுதக் குழு தலைவருக்கு எதிராக சா்வதேச நீதிமன்றில் போர்க்குற்ற விசாரணை!

சூடானில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் அந்த நாட்டு ஆயுதக் குழு தலைவர் அலி முகமது அப்துல் அல்-ரஹ்மான் மீதான வழக்கு விசாரணை நெதா்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கடந்த 2003-ஆம் ஆண்டில் சூடானைச் சோ்ந்த பழங்குடியினா் அரசுக்கு எதிராக கிளா்ச்சியில் ஈடுபட்டனா். அதனை அடக்குவதற்காக சூடான் அரசு அவர்கள் மீது கடுமையான வான்வழித் தாக்குதல் நடத்தியது.

அத்துடன், அரசுக்கு ஆதவாக செயல்பட்டு வந்த அல்-ரஹ்மான் தலைமையிலான ஜன்ஜாவிது ஆயுதக் குழுவினா் பழங்குடியினா் கிராமங்களுக்கு அதிகாலை சென்று தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

கொலை, கொள்ளை, பாலியல் தாக்குதல், சித்திரவதை ஆகியவற்றில் அல்-ரஹ்மானின் ஆயுதக் குழு ஈடுபட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இதுதொடா்பாக அல்-ரஹ்மான் மீது சா்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஐ.நா. பாதுகாப்பு சபையில் கடந்த 2005-ஆம் ஆண்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தற்போது வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில் பங்கேற்ற அல்-ரஹ்மான், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தையும் மறுப்பதாகக் கூறினாா்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!