மிரிஹானை ஆர்ப்பாட்டம்: கைதானோரை பொலிஸார் தாக்கியமை தொடர்பில் விசாரணை

#Police
Prathees
3 years ago
மிரிஹானை ஆர்ப்பாட்டம்: கைதானோரை பொலிஸார் தாக்கியமை தொடர்பில் விசாரணை

மிரிஹானை ஜனாதிபதியின் இல்லத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பொது மக்கள் ஜனாதிபதியின்  மிரிஹானை இல்லத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரில் பலர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டோர் துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் எழுந்த முறைப்பாட்டுக்கு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இதற்கான உத்தரவை இன்று நுகேகொட வலயத்துக்கு பொறுப்பான  பொலிஸ் அத்தியட்சருக்கு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2 ஆம் திகதிஇ இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைக்கான உத்தரவு இன்று பொலிஸ் மா அதிபரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!