கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்க தயாராகி வருகிறார்

#SriLanka #Central Bank #Head
கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்க தயாராகி வருகிறார்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்கத் தயார் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அதாவது, இரண்டு வெளிநாட்டு ஊடகங்களுடன் கருத்து தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்க தயார் என கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கும் அவர் எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளார். அதன் பின்னரே பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பதவியேற்றதன் பின்னர் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் குறித்து தாம் எதனையும் தெரிவிக்காவிட்டாலும், அதற்கான பணிகளை தாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறுகிறார். கலாநிதி நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியில் 29 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி 2020 இல் இராஜினாமா செய்தார்.

இதேவேளை, பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவை நிதியமைச்சின் செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. என்பது தொடர்பில் அவரிடம் வினவிய போது, ஜனாதிபதி நிதியமைச்சராக பதவியேற்றால் மாத்திரமே நிதி அமைச்சின் செயலாளர் பதவியை பொறுப்பேற்க தயார் என வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் மூன்றாவது நாணயக் கொள்கை மீளாய்வு இன்று நடைபெறவிருந்த போதிலும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.