இன்று முதல் சுயாதீனப் பாதையில் சுதந்திரக் கட்சி! - மைத்திரி அறிவிப்பு

#SriLanka #Maithripala Sirisena
Prasu
3 years ago
இன்று முதல் சுயாதீனப் பாதையில் சுதந்திரக் கட்சி! - மைத்திரி அறிவிப்பு

"ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினராகிய நாங்கள், இன்று முதல் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளோம். அதன்படி, எங்களுடைய 16 உறுப்பினர்களும் சுயாதீனமாகச் செயற்படவுள்ளோம்."

- இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எம்.பி. சபையில் இன்று தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"முழுச் சமூகமும் வீழ்ச்சியடைந்துள்ளது. மருந்துகளுக்குக்கூடத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் மக்கள், அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குச் சார்பாக சுதந்திரக் கட்சி இருக்கும்.

அவசரகால நிலைமை அமுல்படுத்தியுள்ளதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை நீக்கி, 19ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். எனவே, இன்று முதல் நாங்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளோம். அதன்படி, எங்களுடைய 16 உறுப்பினர்களும் சுயாதீனமாகச் செயற்படவுள்ளோம்" - என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!