மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்க கலாநிதி நந்தலால் வீரசிங்க இணக்கம்
Mayoorikka
3 years ago

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கு தாம் இணங்குவதாக கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, ஆளுநர் பதவியை பொறுப்பேற்பதற்காக நாளை மறுதினம்(07) நாட்டை வந்தடையவுள்ளதாக, தற்சமயம் வௌிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய அஜித் நிவாட் கப்ரால் நேற்று(04) தமது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



