ராஜபக்ஷர்கள் அனைவரும் பதவிகளை துறக்கத் தயார்
Mayoorikka
3 years ago

அரசாங்கத்தின் இறுதித் தீர்மானம் இன்றிரவு அல்லது நாளை காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். இதனிடையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்றும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சகல ராஜபக்ஷர்களும் பதவிகளை துறப்பதற்கு தயாராகவே உள்ளனர் என்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை துறக்கக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதைவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



