கொழும்பிற்கு முன்னெப்போதும் இல்லாத நிரந்தர வீதித் தடைகள்:யுத்தத்தில் களமிறங்கிய படைப்பிரிவும் வந்திறங்கியதாக தகவல்

Prathees
3 years ago
கொழும்பிற்கு முன்னெப்போதும் இல்லாத நிரந்தர வீதித் தடைகள்:யுத்தத்தில் களமிறங்கிய படைப்பிரிவும் வந்திறங்கியதாக தகவல்

கொழும்பு நகரின் பல வீதிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிரந்தர வீதித் தடைகளுடன் முற்றாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திர சதுக்கத்தின் நுழைவாயில் இரும்புக் குழாய்களால் முற்றாக மூடப்பட்ட ஒரு இடமாகும்.

இதேவேளை, சிகிரியாவில் கடமையாற்றியிருந்த 53ஆவது படைப் பிரிவினர் கொழும்பு நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக நேற்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவின.

53ஆவது படைப் பிரிவினர்  போர்முனையில் போரிட்ட ஒரு பிரிவு. 

பெரிய ராணுவ வாகனங்கள் சாலையில் செல்வது போன்ற பல சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

இந்தத் தடைகளை அமைப்பதன் நோக்கம் பெரிய அளவிலான வெகுஜன எழுச்சியை அடக்குவதாகக் கருதப்படுகிறது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போதிலும் மஹரகம மற்றும் டொரிங்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்கனவே போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!