உலகின் மாபெரும் கோடீசுவரர்கள் தரவரிசையில் அதானி!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால், பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்தாண்டு மே மாதம் வெளியான அறிக்கையின் படி, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, உலக அளவில் அம்பானிக்கு அடுத்தபடியாக 14-ஆவது இடத்தைப் பிடித்திருந்தார்.
இந்த நிலையில், பத்தாயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புள்ள உலகின் மாபெரும் கோடீசுவரர்கள் தரவரிசையில் அதானி இணைந்துள்ளார். உலகின் ஒன்பது உறுப்பினர்களை கொண்ட இந்த பட்டியலில் அதானியும் புதிதாக இணைகிறார்.
அதாவது, கிட்டதட்ட “ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் கோடி (75,99,55,00,00,000)” அளவிலான சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்கள் தரவரிசை இது.
உலக கோடீசுவரர்களான ‘எலான் மஸ்க், ஜெப் பிசோஸ், பெர்நார்டு அர்னால்டு’ ஆகியோரை முந்தியுள்ளார் என்று ஹருன் குலோபல் ரிச் லிஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே 2-வது பெரிய கோடீசுவரரான அதானியின் சொத்து மதிப்பு 2021ம் ஆண்டில் 4,900 கோடி டாலர். அதாவது ரூ.3 லட்சத்து 72ஆயிரத்து 500 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆசியாவில் முதல் கோடீஸ்வரரும், இந்தியாவின் முதல் கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு 23% அதிகரித்து 10,300 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் முகேஷ் அம்பானியின் சொத்து 400 சதவீதம் அதிகரித்துள்ளதெனில், அதானியின் சொத்து மதிப்பு 1830 சதவீதம் அதிரித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டில் அதிகமாக சொத்து சேர்த்த வகையில் மிகப்பெரிய லாபமடைந்தவர் கவுதம் அதானி தான்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தை அதானி தொடங்கிய பின்னர், அவருடைய சொத்துமதிப்பு 5 மடங்கு அதிகமாகி, 8100 கோடி டாலராக அதிகரித்துள்ளது.



