இலங்கை பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை வெளியானது அறிவிப்பு !
#SriLanka
#School
Nila
3 years ago

இலங்கையில் அரசாங்க பாடசாலைகளுக்கு இம்மாதம் விடுமுறை வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அடுத்த வாரம் அரச மற்றும் அரச அனுமதி பெற்று கொண்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதுடன், 18ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் கடந்த 2021ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இந்த ஏப்ரல் மாதம் வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் 18ஆம் திகதி முதல் இந்த ஆண்டிற்கான முதலாம் தவணைக்குரிய கற்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



