பெல்ஜியம் நாட்டில் வட்ட வடிவிலான மீன் தொட்டிகளை விற்பனை செய்ய தடை

Prasu
3 years ago
பெல்ஜியம் நாட்டில் வட்ட வடிவிலான மீன் தொட்டிகளை விற்பனை செய்ய   தடை

பெல்ஜியம் அரசாங்கம் வட்டமான மீன் தொட்டிகளை விற்பனை செய்வதை தடை செய்ய திட்டமிட்டுள்ளது. வட்டமான மீன் தொட்டிகளில் வளர்க்கப்படும் மீன்கள் அதிக அழுத்துத்திற்கு உள்ளாவதாக கூறி பெல்ஜியம் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இது குறித்து பெல்ஜிய அரசாங்கத்தின் விலங்குகள்  நல அமைச்சர் பெர்னார்ட் கிளெர்பயட் கூறுகையில், "வட்ட வடிவிலான மீன் தொட்டிகள் மீன்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

வட்டமான தொட்டிகள் பெரும்பாலும் சதுர அல்லது செவ்வக வடிவ மீன் தொட்டிகளை காட்டிலும்  சிறிய நீர் மேற்பரப்பைக் கொண்டுள்ளன, இது தண்ணீரில் உறிஞ்சப்படும் ஆக்ஸிஜனின் அளவை பாதிக்கிறது.

மேலும் இந்த வடிவிலான தொட்டிகள் மீனின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வை கடுமையாக பாதிக்கிறது.

வட்ட வடிவிலான இந்த தொட்டிகளுக்கான தடை பிரஸ்ஸல்ஸ் தலைநகர் பகுதிக்கு மட்டுமே பொருந்தும். இனி வரும் காலங்களில் விற்பனைக்கு மட்டுமே வட்ட தொட்டிகள் தடைகள் செய்யப்படுமே தவிர மக்கள் அதை பயன்படுத்துவதில் அரசாங்கம் தலையிடாது  " என அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!