ஏமாற்றிய காதலரை வித்தியாசமான முறையில் பழிதீர்த்த காதலி - பாராட்டுகளை குவிக்கும் நெட்டிசன்கள்

Prasu
3 years ago
ஏமாற்றிய காதலரை வித்தியாசமான முறையில் பழிதீர்த்த காதலி - பாராட்டுகளை குவிக்கும் நெட்டிசன்கள்

காதலர்களில் ஒருவர் உண்மையாக இல்லாவிட்டால், அது மற்றவருக்கு நரகம் போல் துன்புறுத்தலை தந்து விடும்.  அதனால், அதுபோன்ற நபர்களிடம் இருந்து விலகி செல்லவே பலர் முயற்சி செய்வதுண்டு.  அதன்பின் தங்களுடைய வாழ்வை அமைதியாக வாழ முயற்சி செய்வார்கள்.

ஆனால், சிலர் ஆத்திரம் தீர பழிதீர்த்து கொள்வதுண்டு.  அந்த வகையில், ஒரு காதலி தன்னை ஏமாற்றிய காதலரை வித்தியாசமான முறையில் பழிதீர்த்து உள்ளார்.  இதற்காக அவருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிகின்றன.

அப்படி என்ன செய்து விட்டார் என்கிறீர்களா?  அந்த பெண்ணின் காதலர் உண்மையற்றவராக நடந்து கொண்டது தெரிய வந்ததும், ஆத்திரத்தில் என்ன செய்வது என தெரியாமல், அவரது வீட்டுக்கே காதலி சென்றுள்ளார்.  காதலரின் விலையுயர்ந்த பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என தேடி பார்த்து உள்ளார்.

சில படங்களில் வருவது போன்று, காதலரின் உடைமைகளை எல்லாம் எடுத்து ஜன்னல் வழியாக வெளியே வீசுவதற்கு பதிலாக, மேசை டிராயர் ஒன்றில் இருந்து ஒரு பொருளை எடுத்துள்ளார்.  இதுவே சரியான பதிலடியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

அந்த மேசை டிராயரில் காதலரின் பிறப்பு சான்றிதழ் இருந்துள்ளது.  அந்த உண்மையான ஆவணம் எதற்கு என முடிவு செய்து, அதனை நன்றாக கிழித்து எறிந்து விட்டார்.  அதனுடன் நின்று விடவில்லை.  காதலர் உயிருடன் இருப்பதற்கான எந்த சான்றும் இல்லை என எழுதியும் வைத்து விட்டு சென்றுள்ளார்.

இந்த விவரங்களை எல்லாம் காதலியின் தோழி சமூக ஊடகத்தில் பரவ விட்டுள்ளார்.  ஒரு கட்டத்தில், காதலருக்கும், காதலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியபோது, வாயை மூடு.  நீ இப்போது உயிருடனேயே இல்லை என காதலி ஆவேசமுடன் கூறியுள்ளார்.

இதற்கு பலரும் தங்களுடைய விமர்சனங்களை பல வகைகளில் பதிவிட்டு உள்ளனர்.  ஒருவர், காதலியின் செயல் சரி என நான் கூறவில்லை.  ஆனால் அவரது செயல்கள் வேடிக்கையானவை என தெரிவித்து உள்ளார்.

மற்றொருவர், நான் தரையில் உட்கார்ந்து வயிறு வலிக்க சிரித்து விட்டேன்.  அதற்காக நன்றி என தெரிவித்து உள்ளார்.

வேறொருவர், அதனை சரி செய்து விடலாம்.  காதலர் சிறிது நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும்.  அதன்பின்னர் வேறு ஒன்றை பெற்று விட முடியும் என தெரிவித்து உள்ளார்.  என்னவாயினும், அந்த நேரத்தில் காதலரை பழிதீர்த்த உணர்வு காதலிக்கு மனநிறைவை அளித்திருக்க கூடும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!