அமைச்சரவையை கலைத்து காபந்து அரசாங்கம் அமைக்க அழைப்பு
#SriLanka
#government
#Meeting
Nila
3 years ago

தற்போதைய அமைச்சரவையைக் கலைத்துவிட்டு, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறு 11 அரசாங்கக் கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
அமைச்சரவை மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் நாட்டு மக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் தங்களால் பெறமுடியவில்லை என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, நாடு அராஜகமாக மாறுவதைத் தடுக்க அமைச்சரவையை உடனடியாகக் கலைத்து, காபந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



