94 இடங்களுக்கு மறுஅறிவிப்பு வரைக்கும் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு - வெளியானது முழு விபரங்கள்
Nila
3 years ago

உடன் அமுலாகும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் அறிவித்துள்ளார்.
கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி மற்றும் நுகேகொடை மற்றும் கல்கிசை ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், களனி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.




