வெயிலுக்கு உகந்த வெள்ளரிக்காய் பருப்பு குழம்பு செய்வது எப்படி?

#Cooking #Vegetable #curry
வெயிலுக்கு உகந்த வெள்ளரிக்காய் பருப்பு குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • வெள்ளரிக்காய் - 1
  • தக்காளி - 2
  • பூண்டு - 4
  • துவரம் பருப்பு - 100 கிராம்
  • வெங்காயம் - 1
  • வரமிளகாய் - 2 
  • பச்சை மிளகாய் - 2
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  • வெண்ணெய் - 1 மேசைக் கரண்டி
  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  • உப்பு - தேவையான அளவு
  • கறிவேப்பிலை - சிறிது
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
  • புளிச்சாறு - சிறிது

செய்முறை:

  1. வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெள்ளரிக்காயை தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.
  2. துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். 
  3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்த பிறகு 
  4. அதில் பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். ‘வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
  5. அடுத்து அதில் வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து சிறிது வதக்கி, தண்ணீர் சிறிது ஊற்றி, மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்.
  6. வெள்ளரிக்காய் ஓராளவு வெந்ததும், அத்துடன் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அதோடு வெண்ணெயையும் சேர்த்து கிளறி, சிறிது புளிச்சாற்றினை சேர்த்து கொதிக்க விட்டு,
  7. கொத்த மல்லியைத் தூவி இறக்கவும். சூப்பரான பருப்பு வெள்ளரிக்காய் குழம்பு தயார்!