இலங்கை அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாடல்: சர்வதேச நாணய நிதியம் தகவல்
Mayoorikka
3 years ago

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் மற்றும் இலங்கை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெர்ரி ரைஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பூரண அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



