மீன்கள் உயிரிழந்துவிடும்: எரிபொருள் நிலையத்திற்கு ஜெனரேட்டருடன் வந்ததால் பரபரப்பு!

Mayoorikka
3 years ago
மீன்கள் உயிரிழந்துவிடும்: எரிபொருள் நிலையத்திற்கு ஜெனரேட்டருடன் வந்ததால் பரபரப்பு!

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கேன்களில் எரிபொருள் நிரப்புவதில்லை என்பதால், கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு   வர்த்தகர் ஒருவர் மின்பிறப்பாக்கியை (ஜெனரேட்டர்) தள்ளிக்கொண்டு வந்துள்ளார்.

கேன்களில் எரிபொருள் வழங்கப்படுவதில்லை பல மணி நேரம் மின்சாரமும் துண்டிக்கப்படுகின்றது. இதனால், தான் வளர்க்கும் மீன்கள் உயிரிழந்துவிடும். ஆகையால்தான், மின்பிறப்பாக்கியை தள்ளிக்கொண்டு வந்​தேன் என தெரிவித்துள்ளார்.

இவர், மீன் வளர்க்கும் வர்த்தக நிலையத்தை கொண்டு நடத்தும் வர்த்தகர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருவளை உள்ளிட்டப் பல கிராமப் பகுதிகளில் அலங்கார மீன் வளர்க்கும் தொழில் ஈடுபடுவோர் மின்தடையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சில வர்த்தகர்கள் தாங்கள் வளர்க்கும் மீன்களை வீட்டுக் கிணறுகளில் போட்டுவிட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!