ஜனாதிபதி மாளிகை உட்பட 191 இடங்களில் மின்வெட்டு இல்லை
#SriLanka
Prasu
3 years ago

இலங்கையில் 13 மணிநேரத்துக்கு மேல் மின்வெட்டு அமுலில் உள்ள நிலையில், ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்றத்துக்குத் தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்கப்படுகின்றது.
சுதந்திர வர்த்தக வலயங்கள், மின்சார நிலையங்களை அண்டிய பகுதிகள், கைத்தொழில் பேட்டைகள் உள்ளிட்ட நாட்டின் 191 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இந்த 191 இடங்களுக்கு மின்சாரத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



