இலங்கை பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!
#SriLanka
#exam
#Student
Nila
3 years ago

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவை கடதாசிகளுக்கு தட்டுப்பாடு கிடையாது என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார்.
கண்டி − அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் ஆசிப் பெற்றதை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலங்களில் திட்டமிட்ட பரீட்சைகளை, திட்டமிட்டவாறே நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் மே மாதம் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
பரீட்சைகளுக்கு தேவையான மேலதிக கடதாசிகளை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிடுகின்றார்.



