இலங்கையில் மக்கள் வாழ்வது மிகவும் கடினம் ! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
#SriLanka
Nila
3 years ago

எதிர்வரும் சில நாட்கள் மக்கள் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. இதற்கு தீர்வு காண எந்த நிறுவனமும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
நிதி நெருக்கடியால் இந்த மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை, அரசாங்க நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் இந்த சூழ்நிலையை நிர்வகிக்க நாங்கள் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தோம்.
அடுத்த சில நாட்கள் பொதுமக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். “சதந்திர வர்த்தக வலயங்களுக்கு மின்சாரம் வழங்கவும் நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். என அவர் குறிப்பிட்டுள்ளார்.



