சிறுவர் முதல் பெரியோர் வரை முழுக்குடும்பத்திற்கும் ஏற்ற மரக்கறி நுாடில்ஸ் சமைக்கும் முறை.

#Cooking #dinner #meal
சிறுவர் முதல் பெரியோர் வரை முழுக்குடும்பத்திற்கும் ஏற்ற மரக்கறி நுாடில்ஸ் சமைக்கும் முறை.

தேவையான பொருட்கள்:

  • நூடுல்ஸ் – 1 பாக்கெட்
  • கேரட் மற்றும் முட்டைக்கோஸ் – 1 கப் (நறுக்கியது)
  • குடைமிளகாய் – 1/4 கப் (நறுக்கியது)
  • பூண்டு – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • வெள்ளை வினிகர் – 1/2 டீஸ்பூன்
  • சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்
  • ஸ்பிரிங் ஆனியன் – சிறிது
  • மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
  • ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதிக்க விட வேண்டும். 
  2. தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் நூடுல்ஸைப் போட்டு வேக வைக்க வேண்டும்.
  3. நூடுல்ஸ் வெந்ததும், அதனை இறக்கி, நீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒரு முறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  4. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்,
  5. அடுத்து அதில் வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கிளறி, மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
  6. பிறகு அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து மீதமுள்ள எண்ணெய் சேர்த்து காய்கறி களுடன் நூடுல்ஸ் சேருமாறு நன்கு பிரட்டி விட்டு இறக்கினால், மரக்கறி நுாடுல்ஸ் ரெடி!!!.!