இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 02-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள்  02-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-முடிவு

வாழ்க்கை ஒரு நிமிடத்தில்
மாறுமா என்று தெரியவில்லை...
ஆனால், ஒரு நிமிடத்தில்
எடுக்கும் முடிவு
நம் வாழ்க்கையையே
மாற்றிவிடும்...

பொன்மொழி - 02 -

தலைப்பு:-பாதை

நீ நடந்து போக பாதை இல்லையே
என்று கவலைப்படாதே நீ
நடந்தால் அதுவே ஒரு பாதை

பொன்மொழி - 03 -

தலைப்பு:-நல்லவர்கள்

பிறருக்கு தேவைப்படும் போது
நல்லவர்களாக தெரியும்
நாம் தான் அவர்களது
தேவைகள் தீர்ந்தவுடன்
கெட்டவர்களாகி விடுகிறோம்..

பொன்மொழி - 04 -

தலைப்பு:-உச்சி

உதிக்கும் போதும்
மறையும் போதும்
ரசிக்கும் உலகம்
உச்சிக்கு வந்தால்
திட்டி தீர்க்கும்
சூரியனை மட்டுமல்ல
மனிதனின்
வளர்ச்சியும் கூட

பொன்மொழி - 05 -

தலைப்பு:-பணிந்து

பணிந்து போ
உன் தகுதியை உயர்த்தும்...!
துணிந்து போ
உன் திறமையை உயர்த்தும்