இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 11-01-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 11-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-சொல்லுதல்

நான் சொல்வதையும் கேள்
என்பவரை விட்டு விலகாதே...!
நான் சொல்வதை மட்டும் கேள்
என்பவரோடு பழகாதே...!!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-கலாச்சாரம்

பொருள்களில் தொடங்கிய
Use and throw
கலாச்சாரம்
இப்போது மனிதர்களில்
முடிகிறது...!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-மன அமைதி

உனக்கு மன அமைதி
வேண்டுமானால்
யாருடைய குறையையும்
காணாதே...!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வாழ்க்கை

மாளிகையோ, குடிசையோ
எங்கு வாழ்கிறோம்
என்பது வாழ்க்கை அல்ல,
நாம் எங்கு
சந்தோஷத்தோடு
வாழ்கிறோம் என்பதே
வாழ்க்கை.....

பொன்மொழி - 05 -

தலைப்பு:-வார்த்தை

உண்மையான வார்த்தைகள்
எப்போதும அழகாக
இருப்பதில்லை.
அழகான வார்த்தைகள்
எப்போதும் உண்மையாக
இருப்பதில்லை.