இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 06-01-2022

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 06-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-புரிதல்

உன்னை புரிந்து
கொள்ளதாத
எதுவும் உன்னிடம்
நிலைப்பதில்லை
உன்னை
புரிந்து கொண்ட
எதுவும்
உன்னை விட்டு
விலகுவதுமில்லை.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-மனவழகு

அழகான முகம் வயதாகிப்
போகலாம்...
கட்டுக்கோப்பான உடல்
இழக்கப்படலாம்...
வைத்திருக்கும் வசதிகள்
கூட காணாமல்
போய்விடலாம்....
ஆனால்
மனதால் அழகானவர்கள்
மரணம் வரை 
சிறந்தவர்களே....

பொன்மொழி - 03 -

தலைப்பு:-எதிரி

கூட்டத்தில்
1 எதிரி
இருந்தால் நீ
வளர்கிறாய் என்று
அர்த்தம்....

கூட்டமே எதிரியாக
இருந்தால்...
நீ
வளர்ந்துவிட்டாய்
என்று அர்த்தம்...!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-பரந்த மனம்

கடலில் கல் எறிவதால்
கடலுக்கு வலிப்பதில்லை.
கல் தான் காணாமல்
போய் விடுகிறது.
பரந்த மனத்துடன்
இருந்தால் விமர்சிப்பவர்கள்
அதில்
காணாமல் போய் விடுவார்கள்...

பொன்மொழி - 05 -

தலைப்பு:-அறிவாளிகள்

கோவில் வாசலில்
இருந்தாலும்
கடவுளிடம்
கேட்காமல்
மனிதர்களிடம்
கையேந்தும்
பிச்சைக்காரர்கள்
உண்மையான
அறிவாளிகள்.