இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 25-12-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 25-12-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-வேஷம்

பாசம் எனும்
கருவறையில்
விழுந்தவர்களை விட..
வேஷம் எனும்
கல்லறையில்
வீழ்ந்தவர்கள்தான்
அதிகம்

பொன்மொழி - 02 -

தலைப்பு:-பசி

அந்தக் கண்களில் தெரியும்
கெஞ்சலை பாருங்கள்..

பசி இல்லாத உலகம் படைக்க
மாட்டாயா இறைவா?

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வாழ்க்கை

விரும்பியது
எல்லாம்
கிடைப்பது இல்லை!
கிடைத்தது
எல்லாம்
விரும்பியது இல்லை!
எதையோ தேடி
எதையோ பெற்று
எதையோ
தொலைத்து
வெளியே சரித்து
உள்ளே தவித்து
வாழும் வாழ்க்கை தான்
பலபேர் வாழ்க்கை!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-துாக்கம்

தேவைக்கு அதிகமான
நினைவுகளும்
கடனும்
துாக்கத்தை
பறித்துக்கொள்ளும்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-வரம்

உலகில் ஒருவனுக்கு
கிடைக்கும்
உயர்ந்த வரம் திருப்தியான
மனம் தான்.!!!