நாட்டில் உணவகங்கள் மூடப்படும் அபாயம்!

#Food
Mayoorikka
2 years ago
நாட்டில் உணவகங்கள் மூடப்படும் அபாயம்!

 நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளை முதல் 80 சதவீதமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின்   தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார் 

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாடு பிரதான நெருக்கடியாக மாறியுள்ளது. இதனால் சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களின் ஊழியர்கள் தங்கள் பணியை தொடர முடியாத நெருக்கடியான சூழ்நிலையை  எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக மரக்கறி மதிய உணவுப் பொதி ஒன்றின்  விலை 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின்  சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.