இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 16-12-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 16-12-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-அடிமை

முயற்சிக்கு
நீ அடிமை என்றால்
வெற்றி உனக்கு அடிமை.
பணிவுக்கு
நீ அடிமை என்றால்
புகழ் உனக்கு அடிமை

பொன்மொழி - 02 -

தலைப்பு:-மௌனம்

மனமானது
கலங்கி
நி்ற்கும் போது
உனது
மௌனம்
கூட
அரவணைத்து
பாதுகாக்கும்...!!!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-உண்மை

உண்மை என்பது
ஓர் இனிமையான
உணர்வு....
உண்மையின் அருமை
தெரியாதவர்கள்
இனிமையின் சுகத்தை
உணராதவர்கள்...

பொன்மொழி - 04 -

தலைப்பு:-மனநிலை

மகிழ்ச்சியாக
இருப்பதற்கு
காரணங்கள்
தேவையில்லை!
நல்ல 
மனநிலையில்
இருந்தாலே
போதும்!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-அன்பு

அன்பு....
அதை நேசிக்கும் அழகான
மனதில் உள்ள மனிதர்கள்
மேல் வையுங்கள்.