சேரன் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு!
                                    Prabha Praneetha
                                    
                            
                                        3 years ago
                                    
                                இயக்குனர் சேரன் தற்போது தமிழ் குடிமகன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய சேரன் இறுதியாக திருமணம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
தற்போது ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சேரன் தமிழ்க்குடிமகன் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீபிரியங்கா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.