விமான விபத்தில் இருந்து தப்பிய நடிகை ரோஜா
                                                        #Actress
                                                        #Accident
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        3 years ago
                                    
                                நடிகை ரோஜா தனியார் விமானம் மூலம் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக விமானம் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அப்போது விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் அங்கிருந்து விமான திருப்பிவிடப்பட்டு பெங்களூருவுக்கு திருப்பி வைக்கப்பட்டது. பின்பு அங்கு வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை.
தொழில்நுட்ப கோளாறு ஏற்படக் காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.