பாலிவுட் நடிகைகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

#Actress #Covid 19
பாலிவுட் நடிகைகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரபல பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர்கான் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நடைபெற்ற பரிசோதனையின் முடிவுகளின்படி இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி இருவரும் பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

மும்பையில் அண்மையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கரீனாவும், அம்ரிதாவும் பங்கேற்றனர். அந்த புகைகப்படத்தை இன்ஸ்டாகிராம் சமூக வளைத்தளத்தில் கரீனா பதிவிட்டிருந்தார்.  இந்த நிகழ்ச்சியில், மல்லிகா அரோரா, கரீஷ்மா கபூர், கரீனா கபூரின் மேலாளர் மசாபா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதேபோல் நடிகரும் இந்தி திரைப்பட இயக்குநருமான கரண் ஜோகர் வீட்டில் நடைபெற்ற விருந்திலும் இவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.  நடிகை அலியா பட் மற்றும் அர்ஜூன் கபூர் உள்பட  இதில் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றால் கரீனா கபூர், அம்ரிதா அரோரா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு  மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

பிரபல நடிகையான கரீனா கபூர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பாலிவுட் திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்போது அமீர் கானுடன் லால் சிங் தத்தா என்ற திரைப்படத்திலும், ரன்வீர் சிங்குடன் தகத் என்ற திரைப்படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு