பிளாஸ்டிக் குழாயால் தாக்கப்பட்ட மாணவன்: ஆசிரியர் தப்பியோட்டம்

பிளாஸ்டிக் குழாயால் தாக்கப்பட்டதில் காயமடைந்த பாடசாலை மாணவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை தாக்கியதாக கூறப்படும் ஆசிரியரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெயங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 10ஆம் திகதி வேகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் ஆசிரியரால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்ப ஆசிரியர் தொழில்நுட்ப மாணவரின் கன்னத்தில் அறைந்து, மண்டியிட்டு, கைகளை எஸ்லோன் பைப்பால் அடித்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மாணவரின் தோலில் வெடிப்பு ஏற்பட்ட காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 10ஆம் திகதி பாடசாலையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர் ஒருவரை வேயங்கொட பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் தொழிநுட்ப ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வார்டு 07 இல் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மாணவனை தாக்கிய ஆசிரியர் ஹம்புட்டியாவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் அவர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் வீடு திரும்பியதும் தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கூறிவிட்டு, வேகொட பொலிஸில் முறைப்பாடு செய்து வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் கையில் பலத்த காயம் காணப்பட்டதாகவும் எலும்புகளில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய, கைகளில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
வகுப்பிற்குப் பொறுப்பான ஆசிரியர்இ மாணவர் தாக்கப்படுவதைத் தடுக்க முயற்சித்த போதும், அது தோல்வியடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.