வடக்கில் மாகாண சபை ஒருங்கிணைப்பு கூட்டம் ஆளுநர் தலைமையில் நடைபெறும்.
#SriLanka
#Jaffna
#Governor
Mugunthan Mugunthan
3 years ago

வட மாகாண சபை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாகாண சபை பேரவையில் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நடைபெறவிருக்கிறது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் காலதாமதம் அடையும் நிலமையில் இந்த ஏற்பாட்டை ஆளுநர் மேறகொண்டுள்ளார்.
இந்தக் கூட்டத்துக்கு வடமாகாண மக்கள் பிரதிநிதிகள், நிர்வாக அதிகாரிகள் எனப் பலரும் அழைக்கப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
இக்கூட்டமானது கடந்த 10ம் திகதி நடைபெறவிருந்தும் வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பு காரணமாக பிற்போடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது



