சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று.03-12-2021

#history #International
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று.03-12-2021

மாற்றத்திற்கான விதையாகும் திறனாளிகள்.வாழ்க்கையை மாற்றிய சாதனை மனிதர்கள் உன்னத மனிதர்களின் வெற்றி ரகசியம். அரசியல் அதிகாரத்தில் பங்களிப்பு கிடைக்குமா?

உடலின் பாகங்களின் குறைபாடுகளை எதிர்த்து சமூகத்தில் எதிர் நீச்சல் அடிக்கும் மா மனிதர்கள் மாற்றுத்திறனாளிகள். ஊனம் என்பது உடலை முடக்கும் செயல் அல்ல, அது புதிய தெம்மை அளிக்கும் ஒன்று என்று கூறி, மாற்றத்திற்கான விதையை மக்களுக்கு கொடுத்து வீறு நடை பயிலுகின்றனர் இந்த மனிதர்கள்.

1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்தது. இதனையடுத்து, 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் குறித்த பார்வையை, வெகுஜன மனநிலையிலிருந்து நீக்க வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கம். 

வரலாற்றையே சில, பல மாற்றுத்திறனாளிகள் மாற்றி கட்டமைத்துள்ளனர். அவர்களில், முதலில் இருப்பவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.கணித மேதை - இயற்பியலாளர் என பல முகங்களைக் கொண்ட ஐன்ஸ்டீன், தனது 3 வயது வரை பேச முடியாமல் இருந்தார். இதே போல், அலெக்சாண்டர் கிரஹாம்பல் கற்கும் திறமையற்ற மாற்றுத்திறனாளி. ஆனால், இவர் கண்டுபிடித்த தொலைபேசிதான் புதிய கற்றல் முறையையே இன்று சமூகத்திற்கு வழங்கியுள்ளது. 

சிறந்த அறிவியல் சிந்தனையாளர் எடிசன் தனது 12 வயது வரை கற்றல் திறமையற்று அவதியுற்றார். மூளைக் கோளாறு உள்ளவன் என்று இவரின் கல்வியை இருட்டாக்கியவர்களுக்கு மத்தியில், இவரின் சாதனைகளைப் பட்டியலிட்டால், உலகம் விழித்துக்கொள்ள, இவரும் காரணமாகி இருக்கிறார் என்பது புரியும்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான Woodrow Wilson, பெரிய சாதனையாளர்களான Tam cruise and Walt Disney கூட கற்க முடியாத குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளே. அங்கத்தில் உள்ள குறைபாடு தங்களை ஒரு பொழுதும் அடக்க முடியாது என மனதில் உறுதியேற்று இவர்கள், நிகழ்த்திய சாதனைகள் ஒரு சமூகத்தின் எழுச்சியாகவே உள்ளது. 

ஆனாலும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப, இந்த சமூகம் இன்னும் கட்டமைக்கப்படவில்லை என்பதே யதார்த்தமான உண்மை.ரயில் மற்றும் பேருந்துகளில் இவர்களுக்கென்று இருக்கைகள் ஒதுக்கப்படுவது போல், நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அரசியல் அதிகார மையங்களில், மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் இடம்பெறும் காலமே, தங்களின் விடியலுக்கு பெரிதும் துணை நிற்கும், என்று நம்புகின்றனர், இந்த உலகை நம்பிக்கையுடன் எதிர்நோக்கும் மாற்றுத்திறன் கொண்ட நம் சகோதர சகோதரிகள்.