இருபதுக்கு இருபது உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை அணி வீரர்கள் குறித்து வெளியான தகவல்கள்

ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை அணியின் சில வீரர்கள் பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் சிறந்த திறமைகளை வௌிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, போட்டித் தொடரில் அதிகமான விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் வனிந்து அசரங்க முதலிடத்தில் உள்ளார்.
தென்னாபிரிக்கா அணிக்கெதிராக பெற்றுக் கொண்ட ஹட்-ரிக் விக்கெட்டுக்களுடன் 7 போட்டிகளில் 14 விக்கெட்டுக்களை அவர் பெற்றுக் கொண்டார்.
அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்களில் மஹீஸ் தீக்ஷன 6 போட்டிகளில் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி நான்காவது இடத்தில் உள்ளார்.
அதிக ஓட்டங்களை பெற்றுள்ள வீரர்களில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் முதலிடத்தில் உள்ளார்.
அவர் 4 போட்டிகளில் 214 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
பெத்தும் நிசங்க இரண்டாவது இடத்திலும் சரித் அசலங்க மூன்றாவது இடத்திலும் பானுக்க ராஜபக்ஷ நான்காவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



