WCT20 2021 - வாழ்வா? சாவா? நியூஸிலாந்து மற்றும் இந்தியா மோதும் இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு
Prasu
3 years ago

டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில், ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை கடந்த 24-ந்தேதி எதிர்கொண்டது. இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் இன்று துபாயில் நடக்கும் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெறும் அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும். தோல்வியடைந்தால் அரையிறுதி வாய்ப்பு மங்கும்.
இதனால் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதில் சந்தேகமில்லை.
நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், புவிக்குப் பதிலாக இஷான் கிஷன், ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.



