WCT20 2021 - அவுஸ்திரேலிய அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று இடம்பெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்ப்பில் குசல் பெரேரா மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காமால் 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ் மற்றும் அடம் ஷம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.
அதனடிப்படையில் அவுஸ்திரேலியா அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டி டுபாய் விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



