WCT20 2021 - நியூஸிலாந்தை எளிதில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி

ரி 20 உலகக்கிண்ண சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட நியூசிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
நியூசிலாந்து அணி சார்பில் மிர்செல் 27 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 25 ஓட்டங்களையும் மற்றும் டெவோன் கன்வே 27 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிஸ் ரவூப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு 135 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஷ்வான் அதிகபட்சமாக 33 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
சொய்ப் மலிக் ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களையும் அசிப் அலி ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் ஹிஸ் சோதி இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதற்கமைய, பாகிஸ்தான் தான் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிப் பெற்று நான்கு புள்ளிகளை பெற்றுள்ளது.



