WCT20 2021 - நியூஸிலாந்து உடனான போட்டியில் பாகிஸ்தான் அணி பந்து வீச தீர்மானம்

Prasu
3 years ago
WCT20  2021 - நியூஸிலாந்து உடனான போட்டியில் பாகிஸ்தான் அணி  பந்து வீச தீர்மானம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அபார வெற்றி பெற்றதால், பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளனர்.

 நியூசிலாந்து அணி;

மார்டின் கப்தில், டார்யல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டீவன் கான்வே, கிளன் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீசம், டிம் ஷெஃப்ரட், மிட்செல் சாட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, டிரண்ட் பவுல்ட்.

பாகிஸ்தான் அணி;

முகமது ரிஸ்வான், பாபர் அசாம், ஃப்கர் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலி, ஆசிஃப் அலி, இமாத் வசீம், ஷதாப் கான், ஹரீஸ் ரவூஃப், ஷாகின் அப்ரிடி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!