WCT20 2021 - நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி
Prasu
3 years ago

ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் முதற்சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நெதர்லாந்து அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நெதர்லாந்து அணி:
மேக்ஸ் ஓடவுட், ஸ்டீபன் மைபர்க், பென் கூப்பர், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ், ரோலோஃப் வான் டெர் மெர்வே, பீட்டர் சீலார், ஃப்ரெட் கிளாசன், பால் வான் மீகரன், பிராண்டன் குளோவர்
இலங்கை அணி:
பாத்தும் நிசங்க, குசல் பெரேரா, சரித் அசலங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்கா, பானுக ராஜபக்ச, தாசுன் ஷனகா, சாமிகா கருணாரத்ன, துஷ்மந்த சமீரா, மகீஷ் தீக்ஷனா, லஹிரு குமார
முன்னதாக இலங்கை அணி கலந்து கொண்ட இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



