26.09.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
26.09.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: தொல்லை தந்த விஷயத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும்.
பரணி: புதிய முயற்சிகளில் ஈடுபடுவது பற்றி அவசரம் வேண்டாம்.
கார்த்திகை 1: நினைத்ததை செய்து முடித்து நிம்மதி அடைவீர்கள்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: உங்களின் உழைப்பிற்கு பிறரது பாராட்டு கிடைக்கும் .
ரோகிணி: குழந்தைகளை பற்றி இருந்து வந்த கவலைகள் தீரும்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த நல்ல செய்தி மாலையில் வந்து சேரும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பணியாளர்கள் சவால் ஒன்றை நல்லவிதமாக நிறைவேற்றுவீர்கள்.
திருவாதிரை: பரபரப்புடன் எதையும் செய்து சிரமத்துக்குள்ளாக வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: நண்பர் ஒருவரை வெகுகாலம் கழித்துச் சந்திப்பீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: மாணவர்கள் பெருமிதம் அடையும் சம்பவம் நடைபெறும்.
பூசம்: எதிர்பாராத வகையில் அதிகாரியின் பாராட்டு கிடைத்து பெருமிதம் வரும்.
ஆயில்யம்: நாள் முழுக்க உழைத்தும் உற்சாகமாக இருப்பீர்கள்.

சிம்மம்: 
மகம்: நல்ல சம்பளம் கிடைக்கும் வகையில் புதிய வாய்ப்பு வரும்.
பூரம்: பணியாளர்கள் சலுகைகள் பெறுவர். பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.
உத்திரம் 1: புதிதாக அறிமுகமாகும் நபர் மூலம் நன்மை உண்டாகும்.

கன்னி:
உத்திரம் 2,3,4: வழக்கமான பணிகளை முடிக்கமுடியாமல் திண்டாடுவீர்கள்.
அஸ்தம்: உங்களது மனபாரங்களைப் பகிர உண்மையான நண்பர்கள் கிடைப்பார்கள்.
சித்திரை 1,2: கவனமாக பேசுவோருக்குப் பிரச்னை ஏதும் வராது.

துலாம்: 
சித்திரை 3,4: பெரிய அளவிலான ரிஸ்க் எடுப்பதை தள்ளி வைக்கலாம்.
சுவாதி: தவறு என்று தெரிந்த எந்த விஷயத்தையும் செய்ய வேண்டாம்.
விசாகம் 1,2,3: தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்றம் உண்டாகும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: அனுபவசாலிகளின் ஆலோசனையால் நல்ல பலன் பெறுவீர்கள்.
அனுஷம்: உற்சாகம் அதிகரிக்கும். பெண்களுக்கு இன்று சிறந்த நாள்.
கேட்டை: பெரிதாகும் என்று நினைத்த பிரச்னை ஒன்று காணாமல் போகும்.

தனுசு: 
மூலம்: உணர்ச்சி வசப்பட்டு மற்றவர்களைப் புண்படுத்தும்படி பேசாதீர்கள்.
பூராடம்: பணியாளர்கள் ஏற்றம் பெறுவீர்கள். கலகலப்பான நாள்.
உத்திராடம் 1: முன்னேற அதிக முயற்சி தேவைப்படும். உறவினர் சந்திப்பு உண்டு.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: கூடுதலாக உழைத்து முன்னேற்றம் காண்பீர்கள்.
திருவோணம்: பணியாளர்களுக்கு அலுவலகத்துக்கு உள்ளேயே இடமாற்றம் உண்டு.
அவிட்டம் 1,2: சவால்களைச் சமாளிப்பீர்கள். அறிவாற்றல் வெளிப்படும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருக்கும்.
சதயம்: பணியாளர்கள் சவால்களை எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: பணி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். மகிழ்ச்சி கூடும்.

மீனம்: 
பூரட்டாதி 4: எதிலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.
உத்திரட்டாதி: நெருங்கிய நண்பர்களிடம் மனம் திறந்து பேசுவீர்கள்.
ரேவதி: தாய் வழி உறவினர்களால் எதிர்பாராத நன்மை நேரும்.