அரிய வகை ஆந்தைகள் மூன்று உயிருடன் மீட்பு
Prathees
4 years ago
அரிய வகை ஆந்தைகள் மூன்று உயிருடன் மீட்கப்பட்டு இன்று புத்தளம் வனஜீவராசிகள் தீணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தில் கூரையின் மேலிருந்து குறித்த ஆநந்தைகள் கீழே வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஆந்தைகள் (Barn Owl) என அழைக்கப்படும் அரிய வகையைச் சார்ந்ததென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ் ஆந்தைகள் நிக்கவரெட்டிய மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.