மட்டக்களப்பு நகரில் பாம்பு போல் ஊர்ந்து சென்ற இளைஞன்
#Batticaloa
Prathees
4 years ago
மட்டக்களப்பு நகரின் மத்தியில் காந்தி சதுக்கத்திற்கு அருகில் ஒரு இளைஞன் பாம்பு போன்று படமெடுத்து, ஊர்ந்து செயற்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
முச்சக்கர வண்டிச் சாரதியான குறித்த இளைஞன் முச்சக்கர வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்த நிலையில் திடீரென்று இப்படியாக நடந்துகொண்டாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
முச்சக்கர வண்டியிலிருந்து வெளியே குதித்து பாம்புபோன்று செயற்படத்தொடங்கியதாகவும் சுமார் ஒரு மணி நேரம் வரை அவர் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் கூறப்படுகின்றது.